அவதூறு வழக்கு: விஜயகாந்த் ஏப்ரல் 13-ல் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாத
தற்போதைய செய்திகள்அவதூறு வழக்கு: விஜயகாந்த் ஏப்ரல் 13-ல் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாத
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாத தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஏப்ரல் 13-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
3.8.12-ம் தேதி விருதுநகரில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் அ.மங்களசாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 2-ம் தேதிவிஜயகாந்த் நேரில் கண்டிப்பாக ஆஜராக கடந்த டிசம்பர் 22-ம் தேதி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் உடல் நலம் சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.சிவக்குமார், ஏப்ரல் 13-ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, அன்றைய தினம் விஜயகாந்த் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.