வட்டார பல்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு வட்டார அளவில் நடைபெற்ற பெண் கல்வி,
தற்போதைய செய்திகள்வட்டார பல்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு வட்டார அளவில் நடைபெற்ற பெண் கல்வி,
ஸ்ரீவில்லிபுத்தூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு வட்டார அளவில் நடைபெற்ற பெண் கல்வி, சுகாதாரம் சார்ந்த பல் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியப் பயிற்றுநர் கனகலட்சுமி வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்புரையாற்றினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள்: தொடக்க நிலை: ஓவியப் போட்டி: வி.விக்னேஷ், உள்ளூர்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி, கோட்டைத்தலைவாசல் நகராட்சி தொடக்கப் பள்ளி எஸ்.கோபிஸ்ரீ, அக்கரைப்பட்டி ஊ.ஒ.ந.பள்ளி எம்.முனீஸ்வரி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
பேச்சுப் போட்டி: வி.கௌசல்யா, கொங்கலாபுரம் ஊ.ஒ.ந.பள்ளி, எம்.சங்கீதா அக்கரைப்பட்டி ஊ.ஒ.ந.பள்ளி, ஆர்.ஸ்ரீநிதி உள்ளூர்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
உயர் தொடக்க நிலை: ஓவியப் போட்டி: ஏ.அய்யனார், கே.தொட்டியபட்டி ஊ.ஒ.ந.பள்ளி, எஸ்.வசந்தகுமார், அக்கரைபட்டி ஊ.ஒ.ந.பள்ளி, எம்.சேதுராகவன், பி.ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
பேச்சுப் போட்டி: வ.கீதா, சொக்கலாம்பட்டி ஊ.ஒ.ந.பள்ளி, ஆர்.அபிராமி, ஊ.ஒ.ந.பள்ளி கொங்கலாபுரம், பி.முனீஸ்வரி, ஊ.ஒ.ந.பள்ளி, இனாம் கரிசல்குளம் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
கட்டுரைப் போட்டி: எம்.சாந்தி, ஊ.ஒ.ந.பள்ளி, சொக்கலாம்பட்டி, ஆர்.முனீஸ்வரி, நகர்மன்ற கம்மாப்பட்டி நடுநிலைப் பள்ளி, எஸ்.பொன்செல்வி, ஊ.ஒ.ந.பள்ளி, இனாம் கரிசல்குளம்.
போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியப் பயிற்றுநர் மாரியப்பன் நன்றி கூறினார்.