தற்போதைய செய்திகள்

ஏஐடியுசி கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பாண்டெக்ஸ்

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியாரிடம் கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு இலவச துணி வகைகள் விநியோகிப்பதை கைவிட வேண்டும். 2017 முதல் இலவச துணிகளை கைத்தறி சட்டத்தறி முலம் உற்பத்தி செய்து விநியோகிக்க வேண்டும்.

கைத்தறி சட்டத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன நெசவாளர் காலனி அமைக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்தொடர்ச்சியாக  தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் செல்வராசு, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில செயல்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நாரா. கலைநாதன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஏஐடியுசி நிர்வாகிகள் முருகன். அபிஷேகம், தினேஷ் பொன்னையா, கலியபெருமாள், சேதுசெல்வம் உள்பட ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT