தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் அருகே மரத்தில் புலியின் நகத் தடம்

தினமணி

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் மரத்தில் புலியின் கால் நகத் தடம் இருந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் மரத்தில் புலியின் நகம் பதிந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் வனப் பகுதிகளையொட்டியுள்ள தங்களது தோட்டங்களுக்குச் செல்வதற்கும், வெளியில் செல்வதற்கும் அச்சமடைந்து வருகின்றனர்.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை வனத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அதை பொதுமக்களும் பார்த்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது புலியின் நடமாட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். மரத்தில் புலியின் நகத் தடமா இல்லையா என்பதை பார்த்த பிறகே கூறமுடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT