முகப்பு
தற்போதைய செய்திகள்

சோனியா, ராகுல் காந்தி நாடு திரும்பினர்

வெளிநாடு சிகிச்சை முடிந்ததை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று நாடு திரும்பினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:18 AM
பகிர்:

வெளிநாடு சிகிச்சை முடிந்ததை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று நாடு திரும்பினார்.

சோனியா காந்தி சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இதனால் அவர் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திதான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி கிட்டவில்லை. 

இதனிடையே சோனியா காந்தி வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்ததை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் இன்று நாடு திரும்பினார். 

முழு கட்டுரையைப் படிக்க →