தற்போதைய செய்திகள்

அடுத்த மாதம் புவனேஷ்வரில் கூடுகிறது பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம்

DIN

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, அதே உற்சாகத்துடன் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகவே உள்ளது.

இத்தேர்தலுக்கான முக்கிய வியூகங்களை வகுப்பதற்காக பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் அடுத்தமாதம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் நடைபெற உள்ள  சட்டப் பேரவை தேர்தல்களிலும் வென்று  ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT