தற்போதைய செய்திகள்

எதிர்ப்பை மீறி நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம்: சுப்பிரமணியன் சுவாமி

DIN

புதுதில்லி: எதிர்ப்பை மீறி நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டு, அவை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் விழா யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும் மீண்டும் இன்னொரு முறை இலங்கை செல்லும் வாய்ப்பு வந்தால் அதை அரசியலாக்கி தடுக்க வேண்டும். நான் அரசியல்வாதி அல்ல, கலைஞன், மக்களை மகிழ்விப்பவன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் எதிர்ப்பை மீறி பயப்படாமல் நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாமி பதிவேற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT