முகப்பு
தற்போதைய செய்திகள்

மிரட்டல் விடுத்து தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் மீது புதுவை நகராட்சி ஆணையர் புகார்

முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் மீது நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் மீது நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி தூய்மையாகவும், வளமான பகுதியாக மாற்றவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தி அங்குள்ள குறைகளை பொதுபணித்துறை, நகராட்சி அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்து வருகிறார்.
இந்நிலையில் முதலியார்பேட்டை தொகுதிக்குப்பட்ட சுதானாநகரில் வாய்க்கால் தூர்வாரி சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சந்திரசேகரனுக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இதன் பேரில் சந்திரசேகரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுதானாநகர் சென்று, அங்குள்ள குறைகள் குறித்து அப்பகுதி மக்களுடன் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த முதலியார்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், எங்களது தொகுதிக்கு வர உங்களுக்கு அனுமதி இல்லை.
யாரைகேட்டு மக்களிடம் பிரச்னை குறித்து பேசுகிறீர்கள் என்று கூறி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மற்றும் ஊழியர்களை பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் மற்றும் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து வந்து விட்டனர். பின்பு காவல்துறை டிஜிபி சுனில்குமார் கௌதமிடம் நேரில் சம்பவம் குறித்து புகார் தெரிவித்து, பாஸ்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திரசேகரன் மனு கொடுத்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் கூறியதாவது:
மக்கள் பணி ஆற்ற சென்ற அரசு அதிகாரிகள், ஊழியர்களை பாஸ்கர் எம்.எல்.ஏ. தகாத வார்த்தைகளில் திட்டி அடிக்க வந்ததார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.
அதிமுக எம்.எல்.ஏ. மீது நகராட்சி ஆணையர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →