விராலிமலை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் சாவு
விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர்.
விராலிமலை: விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோயிலைச் சேர்ந்தவர் திருநாவுகரசு இவரது மனைவி ராஜேஸ்வரி மகன் சித்தார்த் மற்றும் உறவினர்கள் நெடுஞ்செழியன், தென்னவன், மணிமேகலை ஆகிய 6 பேரும் ஒரு காரில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு விராலிமலை வழியாக சென்று கொண்டிருந்தனர் காரை திருநாவுகரசு ஓட்டியுள்ளார்.
விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலை விராலூர் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் மணிமேகலை, சித்தார்த் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மற்ற நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.