சென்னை: தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் வைரமுத்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக் கூறியுள்ளார்.
64-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார். தர்மதுரை திரைப்படத்துக்கு பாடல் எழுதியதற்காக வைரமுத்து 7-ஆவது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார்.
சமூக விழிப்புணர்வூட்டும் கதைக்களம் கொண்ட ஜோக்கர் சிறந்த தமிழ் மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்குநர் ராஜூமுருகன் விருது பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல்களைப் பாடிய சுந்தரா ஐயர், 24 என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு ஆகிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.