திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சாலை விபத்து: 6 பேர் பலி
திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மற்றும் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:57 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மற்றும் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த 6 சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 15க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமாள்கோவில்பட்டி பிரிவு என்ற இடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement