தில்லியில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதுவை மீனவர்கள் பயணம்
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், பல்வேறு கோரி்க்களை வலியுறுத்தியும்....
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், பல்வேறு கோரி்க்களை வலியுறுத்தியும், புதுதில்லியில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் புதன்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர் தக்கப்படுவதை கண்டித்தும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரியும், மீனவர்களுக்கென மத்திய அரசு தனி அமைச்சகம் அமைத்திடக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் சார்பில் வரும் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அதன்படி புதுச்சேரியில் இருந்து இதற்காக புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தில்லி புறப்பட்டு சென்றனர். இயக்க பொதுச் செயலர் வெங்கடேசபெருமாள், தலைவர் குப்புராசு, நிர்வாகிகள் கி.தங்கேஸ்வரன், கோதண்டபாணி உள்பட பலர் தில்லிக்கு பயணமாயினர்.
Advertisement