முகப்பு
தற்போதைய செய்திகள்

பயம் என்பது எங்கள் குடும்பத்திற்கே கிடையாது: தினகரன்

டிடிவி தினகரன், சசிகலா சம்பந்தப்பட்ட உறவினா்கள், நண்பா்கள், ஆதரவாளா்களின் வீடுகள் அலுவலகங்கள் என

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

சென்னை: டிடிவி தினகரன், சசிகலா சம்பந்தப்பட்ட உறவினா்கள், நண்பா்கள், ஆதரவாளா்களின் வீடுகள் அலுவலகங்கள் என 150க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினரகரன் கூறியதாவது:- 

சசிகலாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காகவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் உள்ள எனது பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.

அடையாறில் உள்ள எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை. எங்களை மிரட்டிப் பார்க்கவே வருமான வரி துறையினர் சோதனை நடத்துகின்றனர். சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. பயம் என்பது எங்கள் குடும்பத்திற்கே கிடையாது. 

தவறான தகவலின் பெயரிலேயே எனது உறவினர்களின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. யாரையோ காப்பாற்றும் முயற்சியாக கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம். ஜெ.ஜெ. டி.வியை முடக்கியது போல் ஜெயா டிவியை முடக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.  

முழு கட்டுரையைப் படிக்க →