தற்போதைய செய்திகள்

தில்லியில் மாசு அளவு கடுமையான இருந்தபோதிலும் நாளை முதல் காற்றின் தரம் மேம்படும்

DIN

புது தில்லி: தலைநகர் தில்லியில் காற்றின் மாசு இரண்டாம் நாளாக இன்றும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நாளை முதல் காற்றின் தரம் மேம்படும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நகரின் காற்றுத் தர குறியீடானது நேற்று, 460 என்ற அளவில் இருந்தது சற்று கீழ்நோக்கி வந்ததால் காற்றின் கலந்துள்ள மாசின் அளவு சிறிதளவு முன்னேற்றம் கானப்படுகிறது. மேலும் அல்ட்ராஃபைன் துகள்கள் நேற்று இரவு 7 மணி வரை அளவில் 543 மற்றும் 367 மைக்ரோ கிராம் கன மீட்டர் அளவுக்கு இருந்தது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு மந்திர் மார்க் பகுதியில் 523 ஆகவும், ஆனந்த் விஹார் பகுதியில் 510 ஆகவும் பதிவானது. காற்று மாசு, பனி மூட்டம் போல் காணப்பட்டதால் காலையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. 

பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் சுற்றுவட்டாரத்தில் இருந்து எரிந்து வரும் புகையின் தாக்கம் கணிசமாக குறைந்துவிட்டதாகவும், காற்று தென்கிழக்கு திசையில் வீசுவதால் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதனால் நவம்பர் 15-ஆம் தேதி பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தில்லியில் வளிமண்டல சுழற்சி சாதகமானதாக மாற்றிவிடும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT