தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாடுகளை முடித்துக்கொண்டு தில்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி

DIN

புதுதில்லி: பிலிப்பின்சின் தலைநகர் மணிலாவில் 3 நாட்கள் நடந்த 'ஆசியான்-இந்தியா' நடைபெற்ற உச்சிமாநாட்டில், கிழக்காசியக் கூட்டமமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து இன்று அதிகாலை தில்லி திரும்பினார்.

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசியான் -இந்தியா உச்சிமாநாட்டிலும், கிழக்காசியக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் மோடி பேசுகையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

தீவிரவாதமும், பயங்கரவாதமும் இந்ததப் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களாகும். அவற்றில் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அடங்கும். பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போரிட அனைத்து நாடுகளும் கைகோர்த்துச் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதச் சிந்தனை பரவுவதையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகும். இந்தப் பிராந்தியத்தில் கிழக்காசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த அமைப்பு இனி வரும் ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறுவதையும் நாங்கள் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டிருப்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

மேலும், இந்தியாவின் அடுத்த குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, தனது மூன்று நாள் அரசு முறை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று அதிகாலை தில்லி திரும்பினார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பின்ஸ் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT