உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள திக்ரி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவ் குமார். இவர் பாஜக நிர்வாகியாகவும், அந்த கிராமத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் சிவ் குமார் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென அவரது காரை மறித்த மர்மநபர்கள் தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கியால் சிக் குமாரை சரமாரியாகச் சுட்டனர்.
இதில் ஷிவக்குமார், அவரது பாதுகாவலர் ஒருவர் என இருவரும் இறந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.