முகப்பு
தற்போதைய செய்திகள்

பாட்டியை சுவற்றில் அடித்து கொன்ற பேரன் கைது

புதுச்சேரியில் பாட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பேரனை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 28 நவம்பர், 2017 at 3:49 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:44 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பேரனை போலீஸார் கைது செய்தனர். வேல்ராம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். து மனைவி சுலோச்சனா (எ) மல்லிகா (72). கணவர் இறந்துவிட்டதால் மல்லிகா தன் மகள் வள்ளி மற்றும் பேரன் சதிஷ்குமார் (23) (ஓட்டல் ஊழியர்) ஆகியோருடன் வசித்து வந்தார்.

சதிஷ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு நண்பர்களுடன் சுற்றிவருவதை மல்லிகா கண்டித்துள்ளார். இதற்கு அவரது தாயார் வள்ளி தான் காரணம் எனக்கூறி மல்லிகா திட்டினாராம். 

இதனிடையே கடந்த புதன் கிழமை சதிஷ்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மல்லிகா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சதிஷ்குமார் பாட்டி மல்லிகாவின் தலையை சுவற்றில் முட்டியுள்ளார். இதில் காதில் ரத்தம் வழிந்த நிலையில் மல்லிகா மயக்கமடைந்தார்.
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லிகாவை அடித்ததற்காக சதிஷ்குமாரை கைது செய்தனர். இதற்கிடையே இன்று காலை மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்}இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் உள்ள சதிஷ்குமாரை மீண்டும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.