தற்போதைய செய்திகள்

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைதாகி ஜாமீனில் விடுதலை

DIN

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி மல்லையா கைது செய்யப்பட்டார். எனினும், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நிபந்தனை ஜாமீன் பெற்று அவர் வெளிவந்தார்.

வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் விஜய் மல்லையா மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நிதிமோசடி தொடர்பாக மல்லையாவின் சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மோசடி வழக்குகள் தொடர்பாக மல்லையாவை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்தது. தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி வெஸ்ட்மினிஸ்டர் நகர நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் லண்டனில் விஜய மல்லையா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலே லண்டன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு விட்டது. இந்தியாவில் விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளது.

குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் ஏது இல்லை என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதை ஏற்று லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT