தற்போதைய செய்திகள்

நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இந்த மாத இறுதிக்குள் 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இந்த மாத இறுதிக்குள் 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

வெளி மாநிலங்களில் இருந்து பயிற்சியாளர்கள் தமிழகம் வர உள்ளனர் என்று கூறினார். மேலும் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். பாடத்திட்டம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது, நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். வரைவு பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள் வரை மக்கள் கருத்து கூறலாம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT