தற்போதைய செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் தாலிம் புயல்: ஜப்பானின் தெற்கு, தென்மேற்கு பகுதிகளை தாக்கும் என எச்சரிக்கை

DIN

பசுபிக் பெருங்கடலில் 18-வது புயலாக தாலிம் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் ஜப்பானின் தெற்கு பகுதிகளில் உள்ள தீவான யுஷு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக காற்று வீசும் எனவும், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 644 உள்ளூர் விமானங்கள்  மற்றும் புல்லட் ரயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளி புயல் காரணமாக தலைநகர் டோக்கியோ உட்பட பல இடங்களில் கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT