சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 24 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின்
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 24 அடி உயர்ந்து 90.64 அடியாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணையில் அதிகபட்சம்}61, பாபநாசம் கீழ் அணை}16, சேர்வலாறு அணை}23, மணிமுத்தாறு அணை}14.2, கடனாநதி அணை}12, ராமநதி அணை}10, கருப்பாநதி அணை}14, குண்டாறு அணை}52, அடவிநயினார் அணை}35, நம்பியாறு அணை}2, கொடுமுடியாறு அணை}20, கன்னடியன் அணைக்கட்டு-16.2.
பிற பகுதியில்...திருநெல்வேலி-1, பாளையங்கோட்டை-4, நான்குனேரி-8, களக்காடு-8.6, சேரன்மகாதேவி-6, அம்பாசமுத்திரம்-12, ஆலங்குளம்-18.2, தென்காசி-15.3, செங்கோட்டை-27, ஆய்க்குடி-11, சங்கரன்கோவில்-6, சிவகிரி-6.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 4800 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 807 கனஅடி, கடனாநதி அணைக்கு 252 கனஅடி, ராமநதி அணைக்கு விநாடிக்கு 132 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 119 கனஅடி, குண்டாறு அணைக்கு 66 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 36 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 102 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5.20 அடி உயர்ந்து 83.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 24 அடி உயர்ந்து 90.64 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2.40 அடி உயர்ந்து 43.00 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 2.70 அடி உயர்ந்து 64.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 3.25 அடி உயர்ந்து 68.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 54.46 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 95.00 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 5.54 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 27.00 அடியாகவும் இருந்தது. குடிநீருக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 304 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 50 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 20 கனஅடி, குண்டாறு அணையிலிருந்து உபரிநீர் 66 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு: மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததை அடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. திங்கள்கிழமை பகலில் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததை அடுத்து அருவியில் மேற்கு பகுதியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்தது. பாபநாசம் தலையணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.