எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தம் சிங் தேர்வு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எம்பியாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தம் சிங், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி அல்லது பாட்டாளிக் கட்சி என்பது அந்நாட்டின் முக்கிய நடு-இடதுசாரி அரசியல் கட்சியாகும். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து பாட்டாளி கட்சியே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரே ஒரு எதிர்க்கட்சியாக விளங்கி வருகின்றது.
இந்நிலையில், இந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தம் சிங் (41) இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement