முகப்பு
தற்போதைய செய்திகள்

​மராட்டியத்தில் போலீஸ் என்கவுண்டர்: 13 நக்சலைட் தீவிரவாதிகள் பலி

மராட்டியத்தில் பாதுகாப்பு படை போலீஸாருக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்

Updated On : 22 ஏப்ரல், 2018 at 6:26 PM
பகிர்:

மும்பை: மராட்டியத்தில் பாதுகாப்பு படை போலீஸாருக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டம் எட்டப்பள்ளியின் பொரிய வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் சிறப்பு படை போலீஸ் ஈடுபட்டது. அப்போது மறைந்து இருந்த நக்சலைட்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து நக்சலைட்டுகள் மீது போலீஸார் நடத்திய அதிரடி தாக்குதலில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நக்சலைட் இறப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Advertisement

நக்சலைட் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து எட்டப்பள்ளியின் பொரிய வனப்பகுதிக்கு கூடுதலாக சிறப்பு படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.