தற்போதைய செய்திகள்

தலைநகர் தில்லியில் துணிகரம்: சொத்து பிரச்னைக்காக டாக்டர் மீது துப்பாக்கி சூடு

PTI

புதுதில்லி: தலைநகர் தில்லியில் சொத்து பிரச்னை காரணமாக காரில் வந்த மருத்துவர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

தெற்கு தில்லியின் கடாய்பூர் பகுதியில் டாக்டர் ஒருவர் தனது சகோதரர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப் 29) காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் டாக்டர் வந்த கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

காரில் இருந்த டாக்டரும் பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில், மூன்று அல்லது நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், படுகாயம் அடைந்த டாக்டரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   
விசாரணையில், நீண்ட காலமாக நடந்து வரும் சொத்து தகராறு காரணமாக மருத்துவரின் இரு சகோதரர்களின் தூண்டுதலின் பேரில் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 22 வெற்று தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT