தற்போதைய செய்திகள்

வெள்ளப் பேரழிவை உருவாக்கியது மனிதன்தானே தவிர இயற்கை அல்ல: சுப்பிரமணிய சுவாமி

ANI


புதுதில்லி: கேரளாவில் வெள்ளப் பேரழிவை உருவாக்கியது மனிதன்தானே தவிர இயற்கை அல்ல என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம் முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே பேரழிவிற்கு காரணம். இந்த பேரழிவை உருவாக்கியது மனிதன்தானே தவிர இயற்கை அல்ல. 

முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு பணத்தை சுருட்டுவதில் தான் ஆர்வம் காட்டியதுபோல தற்போதுள்ள அரசாங்கமும் வெறும் வார்த்தையில் வளர்ச்சியை கண்டு வருகிறது. ஒரு போர் அல்லது ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டாலே அதிலிருந்து மீள்வதற்கு தகுந்த மாற்று முன்னெச்சரிக்கை திட்டம் இல்லாமல் நம்மால் ஒருங்கமைக்கப்பட்ட சமுதாயத்தை உருவாக்க இயலாது. பேரழிவுக்குப் பின்னர் வேகமாக நாம் பழைய நிலைக்கு திரும்புவதுதான் நம் சமூகம் எவ்வளவு வலிமையானது என்பதை காட்டும். 

கேரளாவில் ஏற்பட்டுள்ள இவ்வளவு பெரிய மோசமான பேரழிவும் இதுவரை நான் உலகம் கண்டதில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில அரசின் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக கேரளா உருக்குலைந்துள்ளது. எல்லாம் உடைந்து விட்டது. பாலங்கள் இடிந்து விட்டன.

உலகெங்கிலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட எந்த வெள்ளப் பேரழிவின்போதும் இதுபோன்ற ஒன்றுக்கும் உதவதா அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை. இந்த பேரழிவுக்கு பினராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசுதான் காரணம். இந்த வெள்ளப் பேரழிவை உருவாக்கியது மனிதன்தானே தவிர இயற்கை அல்ல என்று கூறினார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு இதுவரை 357 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை பெய்த கனமழையினால் ரூ.19,512 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT