தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்

DIN


இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

லொம்போக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெலான்டிங் நகருக்கு மேற்கு-வடமேற்குத் திசையில், 7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். லொம்போக் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

இந்தோனேசியாவில் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 460-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT