தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குல்: 3 போலீஸார் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.

DIN

 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியை சேர்ந்த பயிற்சி காவலரான ஃபயஸ் அகமது ஷா, நேற்று பக்ரீத் திருநாள் தொழுகையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வந்த ஷா எனும் காவலரை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். 

இதேபோன்று புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரியான முகமது அஷ்ரப் தார் என்பவரும் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். 

குல்காம் பகுதியில் பயிற்சிக் காவலர் ஃபயஸ் அகமது ஷா சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் சிறப்பு காவல் அதிகாரியான அஷ்ரப்பும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் போலீஸார். 

ஒரே நாளில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த காவலர்களின் உடலுக்கு குல்காம் மற்றும் புல்வாமா மாவட்ட காவல் துறை தலமையகங்களில் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT