தற்போதைய செய்திகள்

சீனாவில் ஹோட்டல் திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி

சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

ANI


ஹார்பின்: சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கே ஹார்பின் நகர் சின்பேய் மாவட்டத்தில் உள்ள நான்கு மாடி கொண்ட ஹோட்டல் ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் சிக்கிய 18 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

இளையராஜாவிடம் விருது பெற்ற பாக்யஸ்ரீ போர்ஸ்!

பட்ஜெட்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே: நயினார் நாகேந்திரன்

2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

SCROLL FOR NEXT