முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சேத மதிப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது: ஓ. பன்னீர் செல்வம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்த இடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்த இடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

ஓ.பி.எஸ். உடன் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சென்றிருந்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம் 6 மாத காலத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகம் பாரம்பரியம் மாறாமல் ஆகம விதிப்படி புதுப்பிக்கப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது: - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சேத மதிப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது. 

எதிர்காலத்தில் இதுபோல் ஒரு சம்பவம் எந்த கோவிலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளினால்தான் தீ விபத்து என்றால் கடைகள் அனைத்தும் அகற்றப்படும். மீனாட்சி அம்மன்  கோவிலுக்கு தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். ஆலயப் பாதுகாப்புக் குழு அமைக்கப்படும். தனியார் அமைப்புகளிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க முடியாது என்று கூறினார். 

மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →