தற்போதைய செய்திகள்

காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

வாரணாசி நகரை நோக்கி சென்ற காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

புதுதில்லி: வாரணாசி நகரை நோக்கி சென்ற காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தில்லி அருகே நிகழந்த இந்த சம்பவத்தில் அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. . 

புதுதில்லியில் இருந்து உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு செல்லும் காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம்போல் இன்று பிற்பகல் புறப்பட்டு சென்றது.

அப்போது திடீரென ஹாப்பூர் நிலையத்தில் பிற்பகல் சுமார் 2.14 மணியளவில் அந்த ரயில் நின்றபோது, அமரும் வசதியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதை கவனித்து விட்ட ரயிலின் காவலர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் சில நிமிடங்களில் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 

இச்சம்பவத்தால் ரயில் பயணம் செய்த எந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான பெட்டியை ஹாப்பூர் நிலையத்தில் கழற்றிவிட்டு, அந்த ரயில் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூத்த அதிகாரிகள் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT