முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம்: திருநாவுக்கரசர் எதிர்ப்பு; விஜயதரணி வரவேற்பு

சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் பேரவை உறுப்பினர் விஜயதரணி வரவேற்பு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. ஜெயலலிதா படம் திறப்பதற்கு  சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர்: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறப்பதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. இந்தப் படத் திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பேரவை கொறடாவும், விளவங்கோடு தொகுதி பேரவை உறுப்பினருமான விஜயதரணி ஆதரவு தெரிவித்துள்ளது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →