முகப்பு
தற்போதைய செய்திகள்

மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:16 PM
பகிர்:

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. 

பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 33 மைல்கள் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துகொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலநடுக்கதினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

கடந்தாண்டு 5 மாதங்களுக்கு முன்பு (செப்டம்பர்.2017) மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 370 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →