தற்போதைய செய்திகள்

மக்கள் சேவைக்காகவே அரசியலுக்கு வருகிறேன்: கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின்னர் கமல் பேட்டி 

DIN

சென்னை: மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன் என சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் வரும் புதன்கிழமை (பிப்.21) முதல் தமிழகம் முழுவதும் "நாளை நமதே" சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு பிடித்த முக்கிய தலைவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கமல்ஹாசன் சந்தித்தார்.

கருணாநிதியை சந்திக்க வந்த கமல்ஹாசனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார்.

கருணாநிதியுடனான சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், எனது அரசியல் பயணம் குறித்து மூத்த தலைவர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். கருணாநிதி இல்லத்திற்கு இது முதல் முறை அல்ல. எனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன். எனது அரசியல் பயணத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து கூறினார். 

ஈழ விவகாரத்தில் சிறு வயதிலேயே குரல் கொடுத்துள்ளேன் என்றவர் என் கொள்கைகள் என்ன என்பதை பிப்.21-இல் தெரிந்துகொள்ளலாம். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள்மீது உள்ள அக்கறை மூன்றையும் அவரிடம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். என் கொள்கையில் திராவிடம் இருக்கும் என்றவர் மக்கள் சேவைக்காகவே அரசியலுக்கு வருகிறேன்.

மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில், ஆட்சி குறித்து அனைவருக்கும் ஓரு கனவு உள்ளது. என்னுடைய கொள்கையை திமுக புரிந்துகொண்ட பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT