தற்போதைய செய்திகள்

ரஜினிகாந்த் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர முயற்சி செய்ய முன்வராதது ஏன்?: தங்கதமிழ்செல்வன் கேள்வி

DIN

காரைக்குடி: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர முயற்சி செய்ய முன்வராதது ஏன்? என தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்‍குடி அருகே, புதுவயலில் நடைபெற்ற தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி விழா பொதுக்‍கூட்டத்தில் தங்க தமிழ்செல்வம் கலந்துகொண்டு பேசுகையில், அதிமுகவின் உண்மை தொண்டர்களை இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டணி, கட்சியிலிருந்து நீக்‍கி வருவதாகவும், ஆனால், அதற்கு பதிலாக அவர்களால் புதிய ஆட்களை நியமனம் செய்ய முடிவில்லை என்று தெரிவித்தார். 

ரஜினியின் சொந்த மாநிலமான கர்நாடக அரசிடம் பேசி, தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத்தர முயற்சி செய்ய முன்வராதது ஏன்? என்று கேள்வி  எழுப்பிய தங்க தமிழ்செல்வன், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த், தனக்‍கு நெருக்‍கமாக இருக்‍கும் மத்திய பாஜகவிடம் கூறி அதனை சரிசெய்ய முயற்சிக்‍கலாமே என தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தில் காவேரி பிரச்னை, நீட் விவகாரம் போன்ற வாழ்வாதார பிரச்னையில் தலையிடாத மோடி, இபிஎஸ்-ஓபிஎஸ் விவகாரத்தில் தலையிட்டது ஏன்? கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT