மார்ச் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியில் விற்பனைக்கு வருகிறது தேர்தல் பத்திரம்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் வகையிலான தேர்தல் பத்திரம் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியில் விற்பனைக்கு வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் வகையிலான தேர்தல் பத்திரம் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியில் விற்பனைக்கு வருகிறது. 1-ம் முதல் 10-ம் தேதி வரை இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
அரசியல் கட்சிகளின் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ‘தேர்தல் நிதிப் பத்திரம்’ திட்டத்தை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொடுக்க வகை செய்யவும், அதற்கு மேலான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்களும், இந்தியாவில் பதிவு செய்த அமைப்புகளும் இந்த பத்திரத்தை வாங்குவதற்கு தகுதி படைத்தவர்கள். தேர்தல் பத்திரங்களை பெறுகிற அரசியல் கட்சிகள், உரிய வங்கி கணக்கின் மூலம்தான் வங்கியில் செலுத்தி, அவற்றை பணமாக்கிக்கொள்ள முடியும்.
தேர்தல் பத்திரங்களில் யார் பணம் செலுத்தி அவற்றை வாங்குகிறார்களோ, அவர்களது பெயர் குறிப்பிடப்பட மாட்டாது. ஆனால், அவற்றை யார் வாங்குகிறார்களோ, அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி.) அந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் பத்திரங்களின் ஆயுள்காலம், வெறும் 15 நாட்கள் மட்டுமே. அந்த கால கட்டத்திற்குள், பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி விட வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் மட்டும் இந்த 15 நாட்கள் அவகாசம், 30 நாட்களாக கொள்ளப்படும்.