தற்போதைய செய்திகள்

2018 புத்தாண்டு கொண்டாட்டம்: இந்தோனேசியாவில் ஒரே மேடையில் 450 ஜோடிகளுக்கு திருமணம்

புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியாவில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.

DIN

ஜகார்த்தா: புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியாவில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.

2017 ஆண்டு முடிந்து 2018-ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பு உலகம் முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.  

இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கான்பூரியா கபூரில் நள்ளிரவு நடந்த புத்தாண்டு விழாவில், அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மெகா திருமண நிகழ்ச்சியில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். திருமண சான்றிதழில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, நள்ளிரவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கில் சுமார் 450 தம்பதிகள் தங்களுடைய குடும்பங்களுடன் பிரார்த்தனைக்கு அழைக்கப்பட்டார்கள். 

பின்னர், இதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன. திருமணத்தின் போது பாரம்பரிய இசைகள் இசைக்குழுவினரால் இசைக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்தவர்கள் கூறுகையில், எங்கள் திருமணத்தை "எளிதில் மறக்க முடியாத விதமாக நடத்த முடிவு செய்தோம். அதற்காகவே அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொண்டோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தம்பதியர்கள் அனைவரும் நகரசபைக்கு நன்றி தெரிவித்திருப்பது. 

இந்த மெகா திருமண நிகழ்ச்சியில் திருமண ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் கலந்துகொண்ட பல ஜோடிகள் வண்ணமயமான பாரம்பரிய இந்தோனேசிய ஆடைகளை அணிந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT