தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று புதன்கிழமை காலை 11 மணி முதல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்கல் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆர்.எஸ்.புரா செக்டர் துணை மண்ட அதிகாரி நரேஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பூஞ்ச் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் ஈடுபட்டு வருகிறது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது பொதுமக்களில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நேற்று காலை 11 மணி முதல் தொடங்கி துப்பாக்கிச்சூடு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT