தற்போதைய செய்திகள்

வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டம் பண்டாரச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பிரெட்டிப்பட்டித் தொகுதிக்குட்பட்ட பண்டாரச்செட்டிப்பட்டியில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ள அவரது இறுதிச் சடங்குகளில் பா.ம.க.வினர் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.

இந்திய இராணுவம், துணை இராணுவப்படையில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து தேசத்தை காக்கும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னணியில் இருப்பது தமிழர்கள் என்ற வகையில்  நாம் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதேநேரத்தில் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த நமது படைவீரர்களின் குடும்பத்தினரைப் பேணிக் காப்பதில் நமது அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுரேஷின் குடும்பத்திற்கு அவரது ஊதியம் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது. அவர் வீரமரணம் அடைந்த விட்ட நிலையில் அவரது மனைவிக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT