தற்போதைய செய்திகள்

தென் கொரியா மருத்துவமனையில் தீ விபத்து: 31 பேர் பலி; 70க்கும் மேற்பட்டோர் காயம்

DIN

சியோல்: தென்கொரியாவில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 31 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியா நாட்டில் சியோல் நகரில் மிர்யாங் என்ற பகுதியில் செஜாங் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் அவசர சிகிச்சை அறைக்கு பின்புறம் சுமார் 7.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் 6.30) திடீரென தீ விபத்து ஏற்பட்டது என மருத்துவமனையின் செவிலியர்கள் 2 பேர் தெரிவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீ விபத்து ஏற்பட்டபொழுது மருத்துவமனையில் 200 பேர் இருந்துள்ளனர். தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் உடனடியாக மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் வழியிலேயே இறந்துள்ளனர். 

இந்த தீ விபத்தில் 31 பேர் பலியாகி உள்ளனர் எனவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்த்துள்ளனர். இவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

உயிரழந்தவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்தவர்கள். 

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT