தற்போதைய செய்திகள்

மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது: அமித்ஷா பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்ய சாணக்கியரின் கொள்கைகளைப் போலவே இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.

ANI

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்ய சாணக்கியரின் கொள்கைகளைப் போலவே இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ரம்பாவ் மல்ஜியின் 75வது நினைவு தின நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்யா சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என பாராட்டி பேசினார்.

மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையும் அதுபோலவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் கே.எல்.அத்வானி, 1996-இல் நம்முடைய அரசியலமைப்பும் தேசிய மதச்சார்பின்மை என்ற தலைப்பு உரை நிகழ்த்தினார். அவருக்கு பிறகு வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ், இந்த்ரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT