தற்போதைய செய்திகள்

போலீஸாருக்கு வார விடுமுறை குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்

DIN

சென்னை: போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவலா்களின் குறைகளைத் தீா்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துவா்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் காவலா்களின் தற்கொலைகளைக் கருத்தில் கொண்டு கடந்த 2012-ஆம் ஆண்டு உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், காவல் துறைற நிலை உத்தரவின் அடிப்படையில் போலீஸாருக்கு வார விடுமுறைற அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வார விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் போலீஸாருக்கு கூடுதல் ஊதியமாக ரூ.200 வழங்கப்படுவதாகத் தெரிவித்தாா்.

மேலும், பணிக்கு வரும் காவலா்களுக்கு ரூ.200 வழங்கப்படும் விதியை மாற்ற முடியுமா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT