தற்போதைய செய்திகள்

தில்லியில் பெண் வழக்குரைஞரை பாலியல் வன்முறை செய்த மூத்த வழக்குரைஞர் கைது

PTI

    
தெற்கு தில்லியில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறையில் மதுபோதையில் பெண் வழக்குரைஞரை பாலியில் வன்முறை செய்தது தொடர்பாக மூத்த வழக்குரைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தில்லியில், சாக்கெட் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு, போலீஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அதே நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர், நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறைக்கு மதுபோதையில் வந்தவர், தன்னை பாலியல் வன்முறை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞர் அளித்த புகாரின் பேரில், மூத்த வழக்குரைனரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அறை சீல் வைக்கப்பட்டதுடன் அறையை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT