முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரகாண்டில் அரசு பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி: 9 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலை சூர்யாதருக்கு அருகே அரசு பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:16 PM
பகிர்:

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலை சூர்யாதருக்கு அருகே அரசு பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூர்யாதர் என்ற இடத்தில் 25 பேருடன் சென்ற அரசு பஸ் 250 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
இதில், பஸ்ஸில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Advertisement

விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸார், தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments