தற்போதைய செய்திகள்

மக்களவை தோ்தலில் போட்டியிடும் விருப்பமில்லை முன்னாள் முதல்வா் சித்தராமையா

DNS


பெங்களூரு: மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தார். 

கடந்த 5 ஆண்டுகளாக கா்நாடகத்தின் முதல்வராக இருந்த சித்தராமையா, தற்போது மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் இருக்கிறார். இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரியக் கமிட்டி உறுப்பினராக சித்தராமையா சோ்க்கப்பட்டுள்ளார். இதனால், சித்தராமையா தேசிய அரசியலுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. 

இதுகுறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளா்களிடம், சித்தராமையா கூறியது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக என்னை நியமித்துள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். இதற்காக மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபடப் போவதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. மக்களவைத் தோ்தலில் நான் போட்டியிடப் போவதாக வந்த தகவல்களும் தவறானது. அதுபற்றி நான் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் விருப்பமும் எனக்கு இல்லை.

மக்களவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மக்களவைத் தோ்தலுக்காக கட்சி மேலிடம் எந்த வகையான பொறுப்பு கொடுத்தாலும், அதனை திறம்பட நிர்வகிப்பேன். 

மதவாத அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜக ஆட்சியில் விலைவாசி உயா்வு, பண மதிப்பீட்டு இழப்பால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் மிகுந்த தொல்லையை அனுபவித்து வருகின்றனா். மக்கள் விரோத ஆட்சியை பிரதமா் மோடி நடத்தி வருகிறார். 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர தயாராகி வருகின்றன.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக மகதாயி நதிநீா் பிரச்னையை 15 நாள்களில் தீா்த்து வைப்பேன் என்று எடியூரப்பா கூறி இருந்தார். தற்போது தோ்தல் முடிந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மகதாயி நதிநீா் பிரச்னையை எடியூரப்பா தீா்க்கவில்லை. அதுகுறித்து பேசாமல் மௌனமாக இருக்கிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT