தற்போதைய செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் வெள்ளம்: ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிப் பெண்ணை கட்டிலில் தூக்கிச்சென்ற அவலம்

மத்தியபிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் ஆம்புலன்ஸ் வராத நிலையில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது குடும்பத்தினரே கட்டிலில்

ANI

மத்தியபிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் ஆம்புலன்ஸ் வராத நிலையில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது குடும்பத்தினரே கட்டிலில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே திகாம்கார்ஹ் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக மருத்துவமனையை உதவி எண்ணில் தொடர்புகொண்டு 108 ஆம்புலன்ஸ் அனுப்புமாறு மருத்துவமனை அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர். எனினும், கடுமையான வெள்ளம் சூழ்ந்த அந்த கிராமத்தின் தெருக்களில் ஆம்புலன்ஸ் அடைய முடியவில்லை. இதைடுத்து அவரது குடும்பத்தினரே அவரை கட்டிலில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பிறகே என்னால் எதுவும் சொல்ல முடியும்" என்று பிரித்விப்பூர் மாவட்ட மருத்துவமனை மருத்துவர் ரவி ராவத் கூறினார்.

இதனிடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாம்பு கடித்து உயிரிழந்த குன்வார் பாய் என்னும் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வாகனம் தருமாறு மோஹன்ஹார்க் மாவட்ட மருத்துவமனைக்கு குடும்பத்தார்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தர மறுத்தது. இதனால் இறந்த தனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மகன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் கொண்டு சென்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து இது போல் மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக - தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் | TVK-BJP alliance

2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: 28 பேர் பலி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

SCROLL FOR NEXT