கோவா மின்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
அலுவல் விஷயமாக மும்பை சென்ற கோவா மின்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் நெஞ்சுவலி காரணமாக
மும்பை: அலுவல் விஷயமாக மும்பை சென்ற கோவா மின்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வட கோவாவில் உள்ள கும்பார்ஜூவா தொகுதி எம்எல்ஏவான பாண்டுரங் நேற்று மதியம் மும்பை சென்றார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இது குறித்து கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறுகையில், “அமைச்சர் பாண்டுரங் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு விவரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.