தற்போதைய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை விவாகரம்: மத்திய அரசு 3 மாத கால அவகாசம் கோரி மனு

DIN

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க 3 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசு சார்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குத் தொடா்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக்கிளை, 2017 டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடா்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறைச் செயலா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த இடத்தில் அமைப்பது என்பதை முடிவு செய்ய மத்திய அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜூன் 14-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT