தற்போதைய செய்திகள்

அதிமுக அரசின் சட்டப் போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

DIN

அதிமுக அரசின் சட்டப் போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அதிமுக சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாவில் பேசும் போது முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: - 

காவிரி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டு நாடகமாடியது திமுகதான்.காவிரி விவகாரத்தில் போட்ட வழக்கை சுயநலத்துக்காக திமுக திரும்பப்பெற்றது. 

இத்தனை ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசின் நடவடிக்கையால் வெற்றி கிடைத்துள்ளது காவிரி நீருக்காக போராடியது பலராக இருந்தாலும் தீர்வை பெற்று தந்தது அதிமுகதான். காவிரி விவகாரத்தில் திமுகவும், கருணாநிதியும் தமிழகத்திற்கு துரோகம் செய்தனர். 

காவிரி நடுவர் மன்றம் அமைக்க காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா 22 நாள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு அதிமுக சட்டப் போராட்டம் நடத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம்

திமுகவின் அலட்சியத்தால் 2007இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, கேரளா வழக்கு  தொடுத்தது. காவிரி விவகாரத்தில் திமுகவும், கருணாநிதியும் தமிழகத்திற்கு துரோகம் செய்தனர் என்று கூறினார். 

யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தால் தான் அணையை திறக்க முடியும்.  திமுக ஆட்சியில் இருந்தபோது கூட மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை 

இறுதி மூச்சுவரை விவசாயிகளுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா. திமுகவின் செயல்படாத தலைவராக இருக்கும் ஸ்டாலின் அதிமுக அரசு செயல்படவில்லை என கூறுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT