தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது

DIN


ஜம்மு - காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 

காஷ்மீரில் அதிகரித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு போதிய ஒத்துழைப்பை பிடிபி அளிக்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முடியாத பட்சத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் கவர்னர் வோராவின் ஆட்சிக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளா நிலையில் அங்கு உடனடியாக கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

SCROLL FOR NEXT