முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திரா அமல்படுத்திய நெருக்கடிநிலை இந்தியாவின் இருண்டகாலம்: பிரதமர் மோடி கருத்து

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவின் இருண்ட காலம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Updated On : 26 ஜூன், 2018 at 12:32 PM
பகிர்:


புதுதில்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவின் இருண்ட காலம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

1975-ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரை 21 மாதம் வரை நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நாளே ஜூன் 25. இதை குறிக்கும் வகையில், பிரமதர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 43 ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து உறுதியுடன் போராடிய பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தலைவணங்குவதாகக் கூறியுள்ளார்.

அவர்களது போராட்டம்தான் சர்வாதிகாரத்தை வென்று மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டியதாகவும், மனித உரிமைகளை காத்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். 

Advertisement

ஜனநாயக நிறுவனங்கள் சீர்குலைக்கப்பட்டு, அச்சம் மிகுந்த சூழல் உருவாக்கப்பட்ட நெருக்கடி நிலையை இந்தியா இருண்ட காலமாக நினைவுகூர்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

நெருக்கடி நிலையின்போது மக்கள் மட்டுமின்றி கருத்துகளும், கலை-இலக்கிய சுதந்திரமும் கூட அதிகார அரசியலுக்கு கீழ்ப்படுத்தப்பட்டதாக மோடி குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மதிப்பீடுகளை வலிமையாக்குவதற்கு பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள மோடி, எழுதுவதும், விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் ஜனநாயகத்தின் முக்கியமான அம்சங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெருமை கொள்வோம் என்றும், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை யாரும், எந்த சக்தியும் எப்போதும் நசுக்கிவிட முடியாது என்று அடுத்தடுத்து பதிவிட்டுள்ள பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார். 

மேலும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்தியாவின் இருண்ட காலம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தியும், ஹிட்லரும் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றியவர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.